logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
India

சுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் ; பலர் நழுவல்

புதுடில்லி : ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்து நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள 'டார்மென்ட் அக்கவுன்ட்' எனப்படும் செயலற்ற கணக்குகளுக்கு உரிமை கோராததால் அதில் உள்ள 300 கோடி ரூபாய் பணம் அந்த நாட்டின் கஜானாவுக்கு போகிறது. இதில் 10 இந்தியர்களின் பணமும் அடங்கும். சிக்கினால் கதை கந்தலாகிவிடும் என்ற பயத்தில் நம் நாட்டு குடிமகன்கள் உரிமை கோராமல் நழுவியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி கிடையாது என்ற நிலை இருந்தது. அதனால் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்து வந்தனர். இது பெரும்பாலும் கறுப்புப் பணமே. இது நம் நாட்டில் அரசியல் ரீதியில் மிகப் பெரிய விவாதத்தையும் உருவாக்கி இருந்தது.

இந்நிலையில் சர்வதேச அளவில் பல நாடுகளின் நெருக்கடியைத் தொடர்ந்து தங்களுடைய வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு பகிர்ந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை சுவிட்சர்லாந்து சமீபத்தில் அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற தகவல்களை அளிக்க உள்ளது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்து நீண்ட காலம் பயன்படுத்தாமல் செயலற்று கிடக்கும் கணக்குகள் குறித்த தகவல்களை 2015 முதல் சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டு வருகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் அதன் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிமை கோர வேண்டும். அவ்வாறு யாரும் உரிமை கோராத நிலையில் அந்தக் கணக்கில் உள்ள பணம் முடக்கப்பட்டு அரசின் கணக்குக்கு மாற்றப்படும்.

சுவிட்சர்லாந்து சட்டத்தின்படி 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாத கணக்குகளே செயலற்ற கணக்காக மாறும். அந்த வகையில் 1955ல் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்த 2600 கணக்குகளின் விபரங்களை சுவிட்சர்லாந்து 2015ல் வெளியிட்டது. இந்த கணக்குகளில் 300 கோடி ரூபாய் பணம் இருந்தது. இதைத் தவிர 80க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டகங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது செயலற்ற கணக்குகளின் எண்ணிக்கை 3500 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 இந்தியர்களின் கணக்குகளும் அடங்கும். இந்தக் கணக்குகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து முதலீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு உரிமை கோருவதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு வரை உள்ளது. அதற்குள் உரிமை கோராவிட்டால் இந்தக் கணக்கில் உள்ள பணம் சுவிஸ் அரசுக்கு சென்றுவிடும்.

தங்களைப் பற்றிய விபரங்களைக் கொடுத்து உரிமை கோரினால் அந்த விபரம் அரசுக்கு கிடைத்து விடும்; அதனால் தங்கள் கதை கந்தலாகி விடும் என்ற பயத்தில் இந்தக் கணக்குகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.


முதலீடு செய்துள்ள இந்தியர்கள் யார்... யார்


சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்து பயன்படுத்தப்படாமல் உள்ள 10 இந்தியர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சில கணக்குகளுக்கு உரிமை கோருவதற்கான காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. சிலவற்றுக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை அவகாசம் உள்ளது.சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்தப் பட்டியலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரி அதைப் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட இதுவரை உரிமை கோரவில்லை.

இதில் இரண்டு பேர் தற்போது கோல்கட்டா என்றழைக்கப்படும் முந்தைய கல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தற்போது மும்பை என்றழைக்கப்படும் முந்தைய பம்பாயைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டேராடூனைச் சேர்ந்தவர். இதைத் தவிர பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. லீலா தாலுக்தார் மற்றும் பிரமதா தாலுக்தார் என்பவர்களது கணக்குகளுக்கு உரிமை கோர இம்மாதம் 15ம் தேதி கடைசி நாளாகும். சந்திரலதா பிரான் லால் படேல் மோகன் லால் மற்றும் கிஷோர் லால் என்பவர்களுக்கு அடுத்த மாதம் இறுதி வரை வாய்ப்பு உள்ளது.

மும்பையைச் சேர்ந்த ரோஸ்மேரி பெர்னட் பியாரே வாசுக் என்பவர்களுக்கும் அடுத்த மாதம் இறுதி வரை வாய்ப்பு உள்ளது. டேராடூனைச் சேர்ந்த சந்திர பகதுார் சிங்குக்கும் அடுத்த ஆண்டு இறுதி வரை வாய்ப்பு உள்ளது.

Advertisement

Themes
ICO