logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்க முயற்சி?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற இருக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இந்த சந்திப்பை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

ஏற்கனவே, அவர் லண்டன் செல்வதற்கு முன்பு கூட இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.

மகிந்த தேசப்பிரிய இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதற்கிடையில் தனது பதவிக்காலத்தை அடுத்த வருடம் வரை நீடித்துக் கொள்வதற்கான உயர்நீதிமன்ற தீர்மானத்தை ஜனாதிபதி எதிர்ப்பார்த்திருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில், அவர் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. என்றாலும் தற்போது அதற்கான ஏற்பாடுகள் எவையும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அவ்வாறான ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

All rights and copyright belongs to author:
Themes
ICO