logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

நாடளாவிய ரீதியில் எமது சத்தியாக்கிரகப் போராட்டம் வெடிக்கும்! வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் எமது சத்தியாக்கிரகப் போராட்டம் வெடிக்கும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் நசுருதீன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் வெளிவாரிப் பட்டதாரிகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பதிலைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைத்தீவு, விபுலாநந்த சதுக்கம் அருகில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அன்று உள்வாரி வெளிவாரி என்ற கதை இருக்கவில்லை. இன்று வேண்டுமென்றே இந்தக் கதையை அரசாங்கம் தூக்கிப் பிடித்துள்ளது.

இன்று அரசாங்கம் 2016ஆம் ஆண்டு வரையிலான உள்வாரிப் பட்டங்களை முடித்த பட்டதாரிகளை தொழிலுக்கு உள்வாங்கியுள்ளனர். அதேபோன்று, வெளிவாரிப் பட்டதாரிகளையும் உங்வாங்க வேண்டும்.

3 வருடமாக நாம் இப்போராட்டத்தை நடத்தி வருகிறோம். எமது தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் எமது பிரச்சினையை ஏறெடுத்தும் பார்க்காமல் இன்று ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனர்.

நீங்கள் உடனடியாக கண்விழித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் பிறகு தேர்தல் என்று வரும்போது நாம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க வேண்டிவரும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மட்டுமே இப்படி எமக்கு ஓரவஞ்சனை செய்கிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் போது இந்த உள்வாரி வெளிவாரி என பார்க்கவில்லை. ஆக ஆண்டு அடிப்படையில் மட்டுமே பார்த்தார்கள்.

ஆனால், இன்று இப்பாரபட்சம் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் நாம் கேட்டபோது, ஏன் வெளிவாரியை புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் வருவதில்லை. ஆக முதலில் உள்வாரிக்கு கொடுக்கிறோம். இரண்டாம் கட்டமாக வெளிவாரிக்கு வழங்குவோம் என்று மட்டுமே பதில் வருகிறது. இதனால், வெளிவாரி பட்டதாரிகள் மத்தியில் ஒருவித ஏக்கமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுள்ளது.

பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரும் போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றிருத்தல் அவசியமானது என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது.

நேர்முகப்பரீட்சை நேரத்திலும் அதையிட்டு ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், இன்று நியமனம் வழங்கும் கட்டத்தில் வைத்து இவ்வாறு வெளிவாரிப் பிரச்சினையை அரசாங்கம் முன்வைத்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

நாம் கேட்டதற்கு 75 வீதம் உள்வாரிக்கும், 25 வீதம் வெளிவாரிக்கும் முதலில் வழங்குவோம் என்றனர். அதுகூட தற்போது மீறப்பட்டுள்ளது.

இனியாவது அரசாங்கம் எவ்வித பாகுபாடுமின்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த சகல பல்கலைக்கழகங்களிலுமிருந்து வெளியேறும் சகல பட்டதாரிகளுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அரசு தொழில்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வீதியில் இறங்கி போராடவேண்டிவரும் என்பதை பிரதமருக்கு தெரியப்படுத்துகிறோம்.

அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மற்றுமொரு பட்டதாரி நூறுல் ஹூதா கருத்துரைக்கையில்,

சகல தலைவர்களும் எமக்கு பொய்வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இன்று ஆழ்ந்த தூக்கத்திலுள்ளனர். மூளைக்கும் முண்ணானுக்கும் தொடர்பில்லாத கதையை நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசுகிறார்.

எமது முடிகள் நரைத்துவிட்டன. திருமணம்செய்து பிள்ளைகளும் பிறந்து விட்டன. தொழில்பெறும் உச்சகால எல்லையும் நெருங்குகிறது.

எனவே, அரசாங்கம் இப்போதாவது எவ்வித பாகுபாடுமின்றி தொழிலை வழங்க முன் வரவேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பதில் சொல்லும் என கூறியுள்ளார்.

All rights and copyright belongs to author:
Themes
ICO