logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

தமிழ் மக்களிடத்தில் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கை!

“2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று கூறினார். அதேவிடயத்தை தற்போது சஜித்பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கும்போது, சமஸ்டிக்கான பல ஒழுங்குகள் அதில் இருப்பதாகவும், ஆகவே அதை தாம் எதிர்ப்போம் என்றும் கூறுகின்றார்.

மகிந்த ராஜபக்ச 2006ம் ஆண்டு, தான் கூறியதை நாங்கள் மறந்துவிட்டோம் என நினைத்து இவ்வாறு கூறுகின்றார். ஆனால் நாம் எதையும் மறந்துவிடவில்லை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில், சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடாத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினர் ஏற்கனவே அரசியலில் இருந்தவர்கள். அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்தபோது என்ன விதமாகச் செயற்பட்டார். அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ச எவ்விதமாக செயற்பட்டார்.

அந்தக் குடும்பம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எதுவிதமாகச் செயற்பட்டனர் என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொரு கிராமங்களாகச் சென்று மக்களைப் பார்வையிட்டோம்.

நாங்கள் நேரடியாகப் பார்த்து மக்களுடைய நிலைமைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அந்த விஜயங்களை மேற்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பில் நாம் மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து, நீண்டதொரு அறிக்கையினையும் தயாரித்தோம்.

அந்த மக்கள் சந்திப்பின் அடிப்படையில், எங்களுடைய மக்களுக்கு வீடுகள் மிகமுக்கியமாக தேவைப்பட்டது. 90 வீதமான வீடுகள் அழிவுற்றிருந்தன, எனவே எமது மக்களுக்கு வீடுகள் வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டேன்.

அதற்கு அவர் தன்னிடம் வீடுகட்டுவதற்கு பணம் இல்லை. நான் பணத்திற்கு எங்கு செல்வது என்று கூறி கையை விரித்தார்.

பின்னர் இந்தியாவிற்கு சென்று, முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோது 25000 விடுகளைக் கட்டித்தருவதாக கூறியிருந்தார்.

இது போன்றுதான் ராஜபக்ச குடும்பத்தினருடை செயற்பாடுகள் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை யார்? படுகொலை செய்தது, ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது யார்?.

எங்கள் சமூகத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல்போன சம்பவங்கள் இவற்றிற்கு யார் பொறுப்பு. இவ்வாறான குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் உங்களுடைய எதிர்காலம் எந்தவிதமாக அமையும்.

சஜித் பிரேமதாச, நான்அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒற்றுமையின் அடிப்படையில் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நாட்டை முன்னேற்றுவோம், அதியுச்ச அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என்று கூறுகின்றார்.

இது ஒரு புதியவிடயமல்ல 2006ம் ஆண்டு ராஜபக்சவே அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று கூறினார். அது விடுதலைப் புலிகள் இருந்த மிகவும் பலமான காலம். அப்போது அவர் அவ்வாறு சொல்லவேண்டிய நிலைமை இருந்தது.

ஆனால் தற்போது தான் அவ்வாறு அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று சொன்ன விடயத்தை மறந்து, அதனை நாங்கள் மறந்துவிட்டோம் என நினைத்து பலகருத்துக்களை அவர் கூறுகின்றார்.

சஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளதாவும், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டிக்கான பல ஒழுங்குகள் இருப்பதாகவும், ஆகவே அதை நாம் எதிர்ப்போம் என்று கூறுகின்றார்.

அவரே கடந்த காலங்களில் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று கூறினாரே, தற்போது ஏன் மாற்றிக்கூறுகிறார். உரிமைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கல்ல, உரிமைகள் தமிழ் மக்களுக்கானது.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக்கேட்டு போராடினார்கள். அந்த உரிமையையே நாம் எப்போதும் கேட்போம், விரைவில் அந்த உரிமையைப் பெறுவோம். என்னுடைய கணிப்பின் பிரகாரம், தெற்கிலே மிகவும் கடுமையான போட்டி நிலவுகின்றது.

இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கப்போவது, வடகிழக்கில் அளிக்கப்படவிருக்கின்ற வாக்குகளாகும். நாம் ஒற்றுமையாக ஒருமித்து சிதறாமல், ஒன்றாக இணைந்து வாக்களிப்போமாகவிருந்தால் உரிமைகளை வென்றெடுக்கலாம்.

இந்த புனிதமான கடமையில் அனைவரும் பங்கெடுக்கவேண்டும். இது எமக்கானதல்ல, எங்களுடைய எதிர்கல சந்ததியினருக்கானது.

எமது எதிர்கால சந்ததியினர் சுமூகமாக, சுயமரியாதையுடன், சுதந்திரமாக வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்டுத்த, அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.

Themes
ICO