logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

ஈரான் அரசு கவிழ்கிறது? ஒன்று சேர்ந்த பல நாடுகள்! அமெரிக்காவின் பலே திட்டம்

ஈரானில் தொடர் போராட்டங்களால் மக்கள் புரட்சி வெடித்துள்ளதோடு, வெளிநாடுகளின் அழுத்தமும் அதோடு சேர்ந்துள்ளதால் அரசு கவிழ வாய்ப்புள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் தான் என ஈரான் கூறிய நிலையில் அது அந்நாட்டை சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் தற்போது ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

ஈரான் உச்சத்தலைவர் அலி கமானி, அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரானின் படை தளபதி குவாசிம் இதுபோன்ற போராட்டங்களை எல்லாம் சமாளித்து வந்தார். ஆனால் அவரும் தற்போது இல்லை. இதனால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.

குவாசிம் அளவிற்கு அந்நாட்டில் மக்களுக்கு வசீகரமான தலைவர் யாரும் கிடையாது.

அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. அதேபோல் அங்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்னொரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதனால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரானில் பெட்ரோல் டீசல் விலை 300% உயர்ந்து இருக்கிறது. இதுவும் போராட்டத்திற்கு காரணம்.

இன்னொரு பக்கம் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, உக்ரைன், ஜேர்மனி என்று பல நாடுகள் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஈரான் மீது கோபத்தில் உள்ளது.

ஈரான் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடுகள் முறையான திட்டங்களை வகுத்து வருகிறது.

இதையெல்லாம் பயன்படுத்தி ஈரான் அரசை தூக்கி எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரான் இன்னும் ஒரு சிறிய தவறு செய்தால் மொத்தமாக அந்நாட்டு அரசை அமெரிக்கா கவிழ்க்கும்.

ஆனால் அதற்கு முன்பே ஈரான் அரசு மக்கள் புரட்சி மற்றும் வெளிநாட்டு அழுத்தத்தால் கவிழ வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Themes
ICO