Sri Lanka

ஜனாதிபதியின் பக்கமிருந்து 8 பேர் மஹிந்த பக்கம் தாவத் திட்டம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் உள்ள எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் பக்கம் தாவத் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் இந்த உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குறித்த உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைந்து கொள்வார்கள் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் இணைந்துக் கொள்வது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இணைந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Football news:

Barca President on the Real Madrid match: VAR always favours one team. I have an unpleasant feeling
Faty scored the 9,000 th goal in the history of Barcelona
Griezmann scored in La Liga for the first time since February with a pass from Messi
Suarez came out on the 3rd place in the list of the best Barca Goalscorers in history
Guardiola lost 3 away games in a row in the League for the first time in his career
About Lautaro Marotta: He has not shown the slightest desire to leave
Conte on 1:2 with Bologna: Inter's Level is much lower than expected