Sri Lanka

காரின் உள்ளே இருந்த சவப்பெட்டியை திறந்து பார்த்த போது அதிகாரிகள் கண்ட காட்சி! வெளியான வீடியோ

பிரேசிலில் இராணுவ பொலிசார் காரில் இருக்கும் சவப்பெட்டி ஒன்றை சோதித்து பார்த்த போது, அதன் உள்ளே சுமார் நூறு கிலோவுக்கும் மேல் இருக்கும் கஞ்சா மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேசிலின் Goias பகுதியில் இருக்கும் சோதனை சாவடி ஒன்றில் கடந்த திங்கட் கிழமை இராணுவ பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதன் பின் பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அதில் இருந்த ஓட்டுனர் ஒரு வித பதற்றத்துடனே காணப்பட்டதால், சந்தேகமடைந்த பொலிசார் காரின் உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.

அப்போது, உள்ளே சவப்பெட்டி இருப்பதாகவும், அதன் உள்ளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இருப்பதாக ஓட்டுனர் கூறியுள்ளார்.

இருப்பினும், பொலிசார் சவப்பெட்டியின் உள்ளே இருப்பதை பார்க்க முடிவு செய்த போது, அதன் உள்ளே சுமார் 300 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

CREDIT: CAMPO GRANDE NEWS

இதில் காரின் ஓட்டுனர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும், அவரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசிலில் கொரோனாவால் 45,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 920,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Football news:

Manchester United is ready to pay 120 million euros for Sancho if they get into the Champions League
Saul: if Real Madrid win La Liga, it will only be because they deserve it. VAR puts a penalty in their favor, as they put pressure on the opponent
Tiago put his house in Munich up for sale. Liverpool was Interested in him
Glushakov before the game with Spartak: I have no problems with the fans
Olivier Giroud: I'm Glad that my goal helped Chelsea win
Hulk: the Contract with Shanghai ends in December. I don't want to play in China anymore
Inter will extend their contracts with Handanovic and D'ambrosio until 2022