Sri Lanka

கிளிநொச்சி சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் துணைபோவதாக குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள், மாவட்ட பொது அமைப்புக்கள் என்பன குற்றம் சாட்டியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல்வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதற்கு திரைமறைவில் துணை போவதாகவும் குறிப்பிட்ட பொதுஅமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதாவது, மணலுக்கான எந்தவிதமான அனுமதிகளும் வழங்கப்படாத வன்னேரிக்குளத்தின் உட்பகுதி கல்லாறு, உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, கிளை ஊரியான், கோரக்கன்கட்டு, அக்கராயன், பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் தினமும் 50இற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக, கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட கல்லாறு, பெரியகுளம், ஊரியான் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களிலும் ஆறுகளிலும் அனுமதியற்ற முறையில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதொடர்பாக பொலிஸாருக்கும், பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பலதடவைகள் எடுத்துக்கூறியும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கண்டாவளைப் பிரதேச பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த 11ஆம் திகதி கண்டவாளைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிராத மணல் அகழ்வு கிராம அலுவலர் உத்தியோகத்தர்கள் சென்று மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றினையும், அங்கு குவிக்கப்பட்டிருந்த 50 கியுப்பிற்கும் அதிக மணலையும் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்தபோதும் தற்போது அப்பகுதியில் இன்றும் மணல் மணல் அகழ்வுகள் தொடர்வதாகவும் இதற்கு பொலிஸார் முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Football news:

Barcelona played the best match at Setien. Even Griezmann scored: a perfect parachute after a heel pass from Messi
Arsenal have nothing to celebrate, they have to take every opportunity. Mourinho responded to the gunners' joke about Tottenham
Kike Of Setian: I understand less and less VAR
MATIC has extended his contract with Manchester United until 2023
With the death of Morricone, part of the world's cinema goes. De Laurentiis on the composer
Josep Bartomeu: Setien is doing a great job. We have full confidence in him
Pique on La Liga: Barca do not like to fall behind, but we have made every effort to change the situation