Sri Lanka

கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது: கே.காதர் மஸ்தான்

திருகோணமலை - கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இப்பிரச்சினை கையிலெடுத்து இதற்கு ஒரு முடிவினைப் பெற்றுவிட்டு அரசிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம்.

இந்த நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் சட்டம் சரியாக செயற்படுகின்றதா என்பதில் சில கேள்விக்குறிகள் காணப்படுகின்றன.

அவ்வாறான ஒரு சம்பங்கள் இடம்பெறும்போது சிலர் சட்டங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர் தமது உரிமைகளை வென்றெடுக்க ஏதோ ஒரு வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றார்கள்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் இன்று இந்த அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அறிந்து செயற்படுவதுடன் அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையில் இப்பிரச்சினைகளை கையில் எடுத்து இதற்கு ஒரு முடிவைப் பெற்றுவிட்டு ஆதரவாக வாக்களித்திருக்கலாமென்பது தான் என்னிடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

Football news:

Ronaldo posted a photo of the celebration after Torino's goal: I love this feeling😉 💪 🏼
Flick about Lewandowski and the Golden ball: Why not? He laid the foundations
Jurgen Klopp: my two main Champions League favourites are Bayern and Manchester City
Cheryshev made an assist in La Liga for the first time since September
Muller of the victory in the German Cup: a Bit of a sad moment. There were no fans in this final
Lampard on 3-0 with Watford: a dry Win at home, three goals scored-Chelsea played very well
Pulisic on 3-0 with Watford: Chelsea needed this win. We are confident that we can get into the top 4