Sri Lanka

மஹிந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு சொந்தமாக வழங்கப்பட்ட காணிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏக்கர் கணக்கில் வெளிநாடுகளுக்கு சொந்தமாக காணிகள் வழங்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தரப்பினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் அந்தக் காணிகளை பல்தேசிய நிறுவனங்களிடம் வழங்கிவிடுவார்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு காணிகள் வழங்கப்படக் கூடாது என்பதே மஹிந்த தரப்பின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஏக்கர் கணக்கான காணிகள் அமெரிக்காவிற்கு சொந்தமாகவே விற்பனை செய்பய்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இராணுவத்திற்கு சொந்தமான காணி ஷங்கிரிலா ஹோட்டலுக்காக வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Football news:

Baros will end his career at the end of the season
Pogba and Brunu were injured when they collided in training. The Bournemouth game is in question (Daily Mail)
Ex-President of Barca Gaspar: Messi has a few more years to be the best player in the world
Morata scored a double for Atletico for the first time since March last year
Rummenigge on Tiago: there have been no Contacts with Liverpool, but he wants something new
Rivaldo on Messi in Juve: The world will boom. The Duo of Lionel and Ronaldo will go down in history
Atletico Interrupts the penalty for the second match in a row. Morata converted an 11-yard shot from the 2nd attempt