logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

மகிந்த உங்களையும் விடுதலைப் புலிகளாகவே பார்த்தார்! பிரதமர் ரணில்

“மலையகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு இன்று மிக முக்கிய இடமொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரஜைகளாக அவர்களை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் அவர்களை விடுதலை புலிகளாகவே பார்த்தனர். அது மட்டுமல்ல நகரங்களிலிருந்து வெளியேற விடவில்லை. கொழும்புக்கு வர விட வில்லை. தொழில் புரிய விடவில்லை.

சிலர் மாயமானார்கள், இன்னும் சிலர் வெள்ளை வானில் கொண்டு சென்றார்கள். இன்று அவை ஒன்றுமில்லை எவரும் காணாமல் போவதுமில்லை. கொழும்புக்கு சென்று வேலை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளன.

வெள்ளை வான் இல்லை. அதற்கு பதிலாக சுவசரிய வான் மாத்திரமே உள்ளது என்று கூற விரும்புகிறேன்” என பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இன்று அமைச்சர் திகாம்பரம் அவர்கள் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்தியுள்ளார். நீங்கள் தோட்டத்தொழிலாளர்கள் அல்ல. மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் என்ற நாமத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

முன்பெல்லாம் தோட்டம் தோட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் நீங்கள் தோட்ட பிரஜைகள் அல்ல. நீங்கள் இலங்கை பிரஜைகள். நீங்கள் நாட்டில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். நாம் அனைவரும் இலங்கையர்கள் என கூற விரும்புகிறேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது கல்வித்துறையினையும், சுகாதார துறையினை பொறுபேற்றேன். நான் பிரதமராக ஆனவுடன் மலையக மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க ஆரம்பித்தேன. இன்று ஏழு பேச்சஸ் காணியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.

இது வரை சுமார் 5000 ஒப்பனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் வீடுகளை கட்டிக்கொடுக்கிறோம். தேவையான பணம் தருபவர் இந்திய பிரதமர் மோடி என்று கூற விரும்புகிறேன்.

இன்று உங்களுக்கும் ஒரு காணியிருக்கிறது. எனக்கும் காணியிருக்கிறது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம். எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இதை விட வேகமாக நாம் முன்னேற்றம் அடைவோம்.

கடந்த காலங்களில் அமைச்சர் ராதாகிருஸணன் தலைமையில் கணிதம், விஞ்ஞானம் படிக்கக்கூடிய 25 பாடசாலைகளை மலையகப்பகுதியில் உருவாக்கினோம். நானு ஓயாவில் தேசிய பாடசாலை ஒன்றினை உருவாக்கியுள்ளோம்.

இப்போது தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று பொலிஸ் பதவியில் உள்ளார்கள், அரச சேவையில் உள்ளார்கள். இன்று முஸ்லிம் சிங்கள மக்களை போல் உங்களுக்கு கௌரவத்தினை ஏற்படுத்தியிருக்கிறேன்.

கோத்தபாய ராஜபக்ஸ இந்த பகுதிக்கு என்ன செய்யப்போகிறார் என்று கூற விரும்புகிறேன். மலையக மக்கள் என்று சொல் முடியவில்லை அவர் தோட்ட மக்கள் என்றே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது மாத்திரமன்றி மலையக பகுதிகளில் மல்லிகை பூவினை உற்பத்தி செய்து அந்நியச்செலவாணியினை பெற்றுத்தர போவதாக தெரிவித்துள்ளார்கள்.

இது மாத்திரமன்றி நாங்கள் உருவாக்கிய கணித விஞ்ஞான பாடசாலைகளை மீண்டும் உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்கள்.

எமது நோக்கம் தொழில் துறையினை ஊக்குவித்து தொழில்நுட்ப கல்வியை விருத்தி செய்து இந்த மலையக பகுதிகளில் அதிகமான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே.

எனவே இதனை செய்வதற்கு நீங்கள் அன்னத்தின் முன் புள்ளடி இட்டு சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்

Themes
ICO