logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

பிச்சை எடுக்கவா எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்? முல்லைத்தீவில் முழங்கிய சம்பந்தன்

பிச்சை எடுப்பதற்காகவா எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவிற்கு ஆதரவு தெரிவித்து இன்று புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கௌரவமாக எமது சுதந்திரத்தை பாதுகாக்ககூடிய நியாயமான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே நாங்கள் 70 வருடங்களாக முயற்சிக்கின்றோம்.

நாங்கள யாரிடமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தந்தை செல்வா சாத்வீக போராட்டம் மற்றும் அரசியல் ராஜதந்திர போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

எமது இளைஞர்களும் பிச்சை எடுக்கவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடவில்லை. கிடைக்கு சிறிய உதவிகளுக்குகாக கோத்தபாய ராஜபக்சவின் கட்சியிடம் கை ஏந்தக்கூடாது.

நியாயமான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே நாங்கள் முயற்சித்தோம். அவற்றை பெறக்கூடிய வாக்கு பலத்துடன் நாங்கள் இருக்கின்றோம். எமது வாக்கு பலத்தினூடாகவே நியாயமான அரசியல் தீர்வை பெறுக்கொள்ள முடியும். அதற்காகவே நாங்கள் சஜித் பிரமதாசாவை ஆதரிக்கின்றோம் என்றார்.

Themes
ICO