logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo logo
star Bookmark: Tag Tag Tag Tag Tag
Sri Lanka

புதிய பிரதமருக்கு கடிதம் எழுதிய ரணில்! கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு சென்ற மகிந்த

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஓய்வுபெறும் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் சகல வரப்பிரசாதங்களையும் கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் அனுப்பட்டதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அனுப்பப்பட்ட கடிதத்தை சமகால பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சருக்குரிய சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுக்குமாறு கோரி நாடாளுமன்ற சபைத் தலைவரின் செயலாளரும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குண்டு துளைக்காத வாகனம், 9 பொலிஸ் வாகனங்கள், அம்பியுலன்ஸ் ஒன்று, பிரதமர் காரியாலயத்துக்குரிய 8 வாகனங்கள் என்பனவும், ஒரு வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரும் முன்னாள் பிரதமரினால் கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் படையணிகள், உத்தியோகிபூர்வ வாசஸ்தலம், காரியாலய வசதி, செயலாளர் ஒருவர் என்பனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தநிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவின் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், ரணிலின் கோரிக்கை தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Themes
ICO