Sri Lanka

பயந்து ஓடிய சிறுமியை சுட்டு தள்ளிய கொடூரம்! காப்பாற்ற ஓடிய தந்தை: மியான்மரில் அரக்கர்களாக மாறும் இராணுவ குழு?

மியான்மரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் கடைசி நிமிடங்களை தந்தை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1-ஆம் திகதி முதல் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் இராணுவத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இராணுவத்தினருக்கும், மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, 7 வயது சிறுமி ஒருவர், இராணுவ ஆட்சி குழுவின் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தற்போது அந்த உயிரிழந்த சிறுமியின் பெயர் Khin Myo எனவும், இந்த சிறுமி இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் பயந்து போய் தந்தையிடம் ஓடிய போது, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை U Maung Ko Hashin Bai கூறுகையில், நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன்.

பாதுகாப்பு படையினர் எங்கள் வீட்டிற்குள் வந்து, கதவை உடைத்து துப்பாக்கிச் சூடை நடத்தினர். இதைக் கண்டு என் மகள் பயந்துவிட்டாள், கூச்சலிட்டாள்.

அதன் பின் அவள்ளை என்னை நோக்கி ஓடி வரும் போது, அவர்கள் அவளிடம் நீ பயப்படுகிறாயா என்று கேட்டுவிட்டு, சுட்டு தள்ளிவிட்டனர்.

நான் அவளை சுமந்து கொண்டு காப்பாற்றுவதற்காக தெருவில் ஓடினேன், ஆனால் வழியிலே இறந்துவிட்டாள்.

மேலும், அவர்கள் என் மகனை அடித்து அழைத்துச் சென்றனர். ஆனால் அவன் இப்போது வரை வரவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் சகோதரி கூறுகையில், அவர்கள் கதவுகளை உடைத்து வீட்டைக் கொள்ளையடித்தனர். நாங்கள் பயந்து போய், ஓடி வந்துவிட்டோம் என்று கூறினார்.

உயிரிழந்த Khin Myo கடந்த புதன் கிழமை அங்கிருக்கும் இஸ்லாமிய கல்லறையில், உயிரிழந்த உறவினர்களுக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த கேள்விக்கு மியான்மர் இராணுவம் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Football news:

Antoine Griezmann: I am happy at Barca. We want to win La Liga as well
Ronald Koeman: This is not Messi's last game for Barca in the Spanish Cup, I hope
Lionel Messi: I lift a special trophy as the captain of a special club. We are happy
Koeman won the Spanish Cup for the seventh time both as a coach and as a Barcelona player
Laporta on Messi at Barca: Leo is the best in the world. I am convinced that he wants to stay
Messi, Pique and Busquets won the Spanish Cup for the 7th time and repeated the record of ex-striker Athletic Gainsa
Messi has scored 9 goals in the Spanish Cup finals. He surpassed Athletic legend Sarra