India

அந்தமானுக்கு 'ஆப்டிக் பைபர் கேபிள்' வசதி: மோடி துவக்கி வைத்தார்

புதுடில்லி : சென்னையில் இருந்து அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு, கடலுக்கு அடியில், 2,312 கி.மீ., துாரத்திற்கு 'ஆப்டிக் பைபர் கேபிள்' இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.

கடந்த, 2018, டிச., 30ல் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டத்தை, பொதுத் துறையை சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிர்ணயித்த காலத்திற்கு முன்பாகவே முடித்துள்ளது. துவக்க விழாவில், மோடி பேசியதாவது:இன்று முதல், சென்னையில் இருந்து, போர்ட் பிளேயர் மற்றும் அங்கிருந்து, சுவராஜ் உள்ளிட்ட தீவுகளுக்கு, ஆப்டிக் பைபர் வழியாக, விரைவான இணைய வசதி துவங்கியுள்ளது.

இதன் மூலம், அந்தமான், நிகோபார் தீவுகள், இந்தியாவின் பிற பகுதிகளுடன், அதிவேக இணைய சேவையை பெற வழி ஏற்பட்டுள்ளது. மக்கள் சுலபமாக வாழ தேவையான வசதிகளை செய்து தருவதே, இந்த அரசின் நோக்கம்.

இந்த இணைய வசதி மூலம், அந்தமான், நிகோபார் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், கல்வி கற்கவும், வங்கிச் சேவைகளை பெறவும், வலைதளத்தில் பொருட்களை வாங்கவும், தொலைதுார மருத்துவ சேவைகளை பெறவும் வழி ஏற்பட்டுள்ளது. அந்தமான், நிகோபாரை சேர்ந்த, 12 தீவுகளில், பல திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, விமான சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் மத்திய அந்தமானை இணைக்க, நெடுஞ்சாலையும், இரு பாலங்களும் அமைக்கப்படுகின்றன. கிழக்கு கடலோரத்தில், ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும், கிரேட் நிகோபாரில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சரக்கு பரிமாற்றத்திற்கான துறைமுகம் அமைக்கும் திட்டமும், பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம், புதிய துறைமுகத்தில் பெரிய கப்பல்களை நிறுத்த முடியும். இது, இந்தியாவின் கடல் வழி வாணிபத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் துணை புரியும்.

சுவராஜ், ஷாஹீத், லாங் தீவுகளில், கடலில் சிறிய விமானங்களை இறக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் வரும் மாதங்களில் முடிவடையும். கொச்சியில் கட்டப்பட்டு வரும் நான்கு கப்பல்கள், அந்தமானுக்கும் இதர தீவுகளுக்கும் இடையிலான சேவையில் விரைவில் ஈடுபடுத்தப்படும்.

இந்தியா, தற்சார்பு கொள்கையை கடைபிடித்து, உலகளவில், பொருட்கள் சப்ளை மற்றும் அவற்றின் மதிப்பில், மிக முக்கிய இடத்தை பிடிக்க, உறுதி பூண்டுள்ளது. இதற்கு, துறைமுக வசதி, நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றை வலிமையாக்குவது முக்கியம். அந்தமான், நிகோபாரில் மேற்கொள்ளப்படும் நவீன அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மூலம், நீல பொருளாதாரம் எனப்படும், மீன், கடற்பாசி உள்ளிட்ட கடல்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்கள் மேம்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Football news:

गैरेथ गठरी के एजेंट: वास्तविक जीवन में, गैरेथ अलग ढंग से इलाज किया गया था । मैं टोटेनहम मिडफील्डर गैरेथ गठरी का प्रतिनिधित्व करता है जो एक वापसी
मीका रिचर्ड्स: लोग लिखते हैं: रिचर्ड्स केवल काम करता है क्योंकि बीएलएम रहते हैं । लगभग - मैं कड़ी मेहनत के माध्यम से इस हासिल
बार्का के पूर्व निदेशक: मार्टिनो मेस्सी ने कहा: मैं आप राष्ट्रपति कहते हैं, वह मुझे बाहर फेंक देंगे कि पता
लिवरपूल एमबीएपी के घेरा के साथ संपर्क में हैं और रियल मैड्रिड अगली गर्मियों के साथ उसके लिए प्रतिस्पर्धा करेंगे
मेस्सी और रोनाल्डो के बाद अगले: डे चोटाइन पर कैरेघर । इस प्रीमियर लीग में सबसे अच्छा खिलाड़ी है
Morata में पहुंचे ट्यूरिन. उन्होंने कहा कि ऋण पर जौव को जाता है
बार्सिलोना वह लिवरपूल के लिए ले जाया गया इससे पहले कि साबूदाना खरीदना चाहता था. कैटालान 10 लाख यूरो का भुगतान करने के लिए तैयार थे