India

காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு; பிரசாந்த் அறிக்கையால் திமுக அதிர்ச்சி

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த தகவல் தெரிந்ததும், காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,விடம் பேரம் பேசத் துவங்கி விட்டது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், ஐந்து தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2014 சட்டசபை தேர்தலில், 40 தொகுதிகளை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, 41 தொகுதிகள் தான் கிடைத்தன; அதில், எட்டு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில், 4 சதவீதம் ஓட்டுக்கள் தான் உண்டு என்பதால், ஒரு லோக்சபா தொகுதிக்கு, ஆறு சட்டசபை தொகுதிகள் என்ற அடிப்படையில், 48 தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்பதற்கு, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.


தள்ளிவைப்பு:

ஆனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ௩௭௦வது சட்டப்பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில், சிறுபான்மையினர் ஓரணியில் திரண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், தற்காலிகமாக அவர்களின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால், சிறுபான்மையினரின் ஓட்டுக்கள், காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக அதிகரித்துள்ளதை தான், லோக்சபா தேர்தல் முடிவுகள் காட்டின.

இந்நிலையில், தி.மு.க.,விற்கு தேர்தல் வியூகத்தை வகுத்து வரும், தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனம், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் குறித்து, 'சர்வே' எடுத்துள்ளது. அந்த சர்வே அறிக்கையில், காங்கிரஸ் கட்சிக்கு, 8 சதவீதம் ஓட்டுக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், தி.மு.க., மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு, 4 சதவீத ஓட்டுக்கள் இருக்கும் போதே, 2016 தேர்தலில், அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேசியது. கடைசியில், 41 தொகுதிகளில் உடன்பட்டது. தற்போது அக்கட்சிக்கு, 8 சதவீதம் ஓட்டுக்கள் இருக்கிறது என்பதால், கூடுதல் தொகுதிகளை கேட்டு, நெருக்கடி தருமே என, தி.மு.க., மேலிடம் கவலையில் உள்ளது.


வலியுறுத்தல்:

இந்த தகவல் தெரிந்து, காங்கிரஸ் இப்போதே பேரம் பேசத் துவங்கி உள்ளது. தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை பெற்றாக வேண்டும் என, டில்லி மேலிடத்தில், தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வலியுறுத்த துவங்கி விட்டன. இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறுகையில், 'வரும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள, 60 தொகுதிகளை பட்டியலிட்டுள்ளோம். 50 தொகுதிகளுக்கு குறைவாக பெற மாட்டோம்' என, தெரிவிக்கின்றன

- நமது நிருபர் -

Advertisement

Football news:

Klopp की तरह नहीं था, वाहवाही पर लिवरपूल बेंच के हटाने के बाद Christensen
बार्सिलोना और वॉल्वरहैम्प्टन 30 लाख यूरो के साथ साथ बोनस के लिए सेमेडु हस्तांतरण करने के लिए सहमत कर सकते हैं
सीईएससी फेबरेगास: माने प्रीमियर लीग में सबसे अच्छा खिलाड़ी है
Benzema खेला अपने 350 खेल रियल मैड्रिड के लिए ला लीगा में
एटलेटिको
Kulusevski रन की छठी के साथ स्पर्श और पहले शॉट के लिए Juve-यह महत्वपूर्ण है में पहली जीत के कोच पिरलो
रियल मैड्रिड के 2000 के दशक में पैदा हुए 4 खिलाड़ियों को रिहा करने के लिए ला लिगा में पहली बार था