India

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் குசும்பு வீடியோ!

புது டில்லி: இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் ஆட்டத்தால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு ரசிகர் ஒருவரின் முகபாவனை மிகவும் பிரபலம். அவரை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய வீடியோ வெளியிட்டுள்ளது.

latest tamil news


இங்கிலாந்தில் 2019-ல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடர் முழுவதுமே பாகிஸ்தான் மோசமாக ஆடியது. இந்தியாவுக்கு எதிரான மேட்சின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது மைதானத்தில் கொட்டாவி விட்ட புகைப்படங்கள் வைரலாகின. டவுன்டனில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் மோசமான ஆட்டத்தை பார்த்து அந்நாட்டு ரசிகர் ஒருவர் மொட்டை தலை, ஜெர்க்கின், கட்டம் போட்ட சட்டை அணிந்தபடி இடுப்பில் கை வைத்துக் கொண்டு செம கடுப்பாக பார்ப்பார். இந்த முகபாவனை மீம்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அவர் பிரபலமானார்.


latest tamil news


இந்த நிலையில் இங்கிலாந்துடன் பாகிஸ்தான் விளையாடும் டெஸ்ட் தொடர் புதன் கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாகிஸ்தான் அணியினரை ஊக்குவிக்க அந்நாட்டு கிரிக்கெட் மீம் புகழ் முஹம்மது சரிம் அக்தரை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் காணப்பட்ட அதே உடையில் இருக்கும் அவர், பெருமையுடனும் ஆர்வத்துடனும் விளையாடுங்கள் என கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு அவரது மீம்ஸ் மூலமே கிண்டலாக பதில் கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Football news:

गोलकीपर की किस तरह चेल्सी ले गए थे? एडुआर्ड मेन्डी 6 साल पहले काम से बाहर था, चेक प्रभावित और केपू की जगह लेगा
मैनचेस्टर यूनाइटेड पर सोल्स्कजैर केवल वान डी बेक पर हस्ताक्षर: आप डोनी के लिए अनादर दिखाने के लिए, वह एक शीर्ष खिलाड़ी है
मिलान करना चाहते हैं पर हस्ताक्षर करने के लिए स्ट्राइकर Bude-Glimt Hauge. उन्होंने कहा कि गुरुवार को यूरोपा लीग में उन्हें रन
रिवाल्डो: बार्सिलोना सुआरेज़ के लक्ष्यों के बिना आसान नहीं होगा
सेविले से मुनीर नियमों को फिर से लिखना फीफा द्वारा मजबूर किया गया था । अब खिलाड़ियों को मैं पहले से ही स्पेन के लिए खेला है
लैम्पार्ड के लिए बात करेंगे Kepa और Caballero हस्ताक्षर करने के बाद Mendy
राल्फ Rangnick: Havertz - Cruyff के दिन उपस्थित. मैं अपने खेल में किसी भी कमजोरियों नहीं दिख रहा है