India

ரவுடிகளை ஒடுக்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் எப்போது

சென்னை: ரவுடிகளை ஒடுக்க சட்ட வரைவு மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மசோதா சட்டமாக எப்போது சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என பதில் அளிக்கும்படி உள்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் ஜோசப் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான வேலு உள்ளிட்ட சிலரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைத்தனர்.இது தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் வேலுமணி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:


latest tamil news


துாத்துக்குடி மாவட்டத்தில் சுப்ரமணியன் என்ற போலீஸ் மீது ஒரு ரவுடி குண்டு வீசி கொலை செய்துள்ளான். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட ரவுடி குண்டு வீசி போலீசை கொன்றது 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ரவுடிகளின் செயல்பாடு இருப்பதை நிரூபிக்கிறது.தமிழகத்தில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சார்பில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத நடவடிக்கைகளும் அதிகமாக நடந்துள்ளன. அரசியல்வாதிகளிடம் ரவுடி கும்பலிடம் சட்டவிரோதமாக ஆயுதங்கள் உள்ளன.இப்படிப்பட்ட நிலையில் மஹாராஷ்டிரா போல் தனி சட்டம் தேவையில்லை எனக் கூற முடியாது. இத்தகைய சட்டத்தை இயற்றினால் ரவுடிகள் சமூக விரோதிகளை ஒடுக்க போலீசுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும். எனவே தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்ட வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு மாநில உள்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மசோதாவை சட்டமாக்க சட்டசபையில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கு உள்துறை செயலர் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Advertisement

Football news:

जेनिट ने हमें कड़ी मेहनत की है, लेकिन बोरुसिया स्कोर करने में कामयाब
जूव के खिलाफ डिफेंडर की भूमिका पर फ्रेंकी डी जोंग: बार्सिलोना खेलने की जरूरत है, जहां खेलने के लिए हमेशा तैयार
रशफोर्ड 4 लक्ष्यों के साथ मौसम चैंपियंस लीग के स्कोरर की दौड़ का नेतृत्व किया
होल्ंड चैंपियंस लीग में पहले 10 मैचों में सबसे अधिक गोल (12) रन बनाए
बर्का के साथ पिरलो हे 0:2: इस मैच जुवेंटस बढ़ने में मदद मिलेगी
ग्रिज़मान कोमैन के तहत 6 मैचों में किसी भी प्रभावी कार्रवाई नहीं बना था
ओले गुन्नार सोलस्कजैर: लीपज़िग मैनचेस्टर यूनाइटेड के लिए कड़ी मेहनत की है । रशफोर्ड खेल पर एक बड़ा प्रभाव पड़ा