India

'சிவில் சர்வீசஸ்' முடிவுகள் வெளியீடு; ஐ.ஆர்.எஸ்., மாணவர் முதலிடம்

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 'சிவில் சர்வீசஸ்' பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம், 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள், தற்போது, சிவில் சர்வீசஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதல்கட்டத் தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்க்காணல் என, மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். கடந்த, 2019ம் ஆண்டுக்கு, நாடு முழுதும், காலியாக உள்ள, 927 இடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான முடிவுகளை, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்தம், 829 பேர், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 304 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தோர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் பிரிவில், 78; இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 251; எஸ்.சி., பிரிவில், 129; எஸ்.டி., பிரிவில், 67 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 182 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மொத்தம், 11 மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சாதனை மாணவர்கள்:

ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த, பிரதீப் சிங், 29, தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் கடந்தாண்டு தேர்வில் வென்று, ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவைப் பிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறார். தன் இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில் முதலிடம் பெற்று உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள ஜதின் கிஷோர், 26, டில்லியைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு தேர்வில் வென்று, ஐ.இ.எஸ்., எனப்படும் இந்தியப் பொருளாதார சேவை அதிகாரியாக தேர்வானார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தில், உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்புரைச் சேர்ந்த, பிரதிபா வர்மா, தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும், பெண்களில், முதலிடத்தையும் பிடித்துள்ளார். கடந்தாண்டு தேர்வில், 489வது, 'ரேங்க்' பெற்று, ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரியாக, வருமான வரித் துறையில் பணியாற்றி வருகிறார். தன் இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


மதுரை கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம்:

மதுரை காளவாசலை சேர்ந்தவர் பாஸ்கர், மத்திய அரசு அதிகாரி. இவரது மனைவி லீலாவதி. இவர்களது மகன் கணேஷ்குமார், 27, சிவில் சர்வீசஸ் தேர்வில், தேசிய அளவில் ஏழாவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பள்ளிப் படிப்பை மதுரை கேந்திரிய வித்யாலயாவிலும், கான்பூர் ஐ.ஐ.டி.,யில், பி.டெக், ஆமதாபாத் ஐ.ஐ.எம்., மில் எம்.பி.ஏ.,வும் படித்துள்ளார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், பணியை ராஜினாமா செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானார்.

அவர் கூறியதாவது: கடந்த, 2018ம் ஆண்டு தேர்வில் தோல்வியுற்றேன். கடின உழைப்புடன் படித்து, தற்போது, அகில இந்திய அளவில் ஏழாவது இடம் பெற்றுள்ளேன். ஐ.ஏ.எஸ்., பணிக்கு செல்வதை விட, ஐ.எப்.எஸ்., எனப்படும், அயல் உறவு துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Football news:

लिवरपूल के लिए जरा भी खरीद लेंगे 41 लाख पाउंड. वूल्वरहैम्प्टन को भुगतान करना होगा 13.5 हूवर के लिए दस लाख
8 बवेरिया की पसंदीदा संख्या है. अब वह स्काल्के हराया: कुनाबेरी एक हैट्रिक रन बनाए, समझदार 1+2 रन बनाए, लेवंदोवस्की एक रबोना द्वारा सहायता के साथ आया था
लिवरपूल की तारीख के साथ एक 5 साल के अनुबंध पर सहमत हुए. हस्तांतरण राशि हो सकता है 43 लाख यूरो
मैं सब कुछ छोड़ दिया और मेरी पसंदीदा टीम के लिए दुनिया के दूसरे पक्ष के लिए चला गया. शोस्पोर्ट संपादकीय बोर्ड से सैंटोस
लेवंडोवस्की 7 सत्रों में बुंडेसलीगा के 1 दौर में रन बनाए और चैम्पियनशिप रिकॉर्ड दोहराया
के खिलाफ एक हैट्रिक रन बनाए बुंडेसलीगा दौर में हैट्रिक रन बनाए 1 शाल्के के खिलाफ मैच (7:0, दूसरी छमाही)
लेवंदोव्स्की एक पंक्ति में अपने 10 वीं बुंडेसलीगा खेल में स्काल्के के लिए रन बनाए । यह एक लीग रिकॉर्ड है