India

சமூக வலைதள பயன்பாடு; சி.ஐ.எஸ்.எப்., புது உத்தரவு

புதுடில்லி: 'சமுக வலைதளங்களை பயன்படுத்துவதில் உள்ள அபாயங்கள் குறித்தும், அதை முறையாக பயன்படுத்துவது பற்றியும், வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, கமாண்டர்களிடம், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது.

துணை ராணுவ படையான, சி.ஐ.எஸ்.எப்.,பில், 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சி.ஐ.எஸ்.எப்., சமூக வலைதளங்களை வீரர்கள் பயன்படுத்துவது தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 'புதிய வழிகாட்டுதல்களின் படி, வீரர்கள் அனைவரும், 'டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தங்கள் கணக்கு விபரங்களை தெரிவிக்க வேண்டும்' என, சி.ஐ.எஸ்.எப்., உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சி.ஐ.எஸ்.எப்., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி, வீரர்களிடம் விழிப்புணர்வு இல்லை. எனவே, வீரர்களிடம் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கமாண்டர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை தொடர்பு கொள்வதற்காக, சமூக வலைதளங்களை பயன்படுத்த, சி.ஐ.எஸ்.எப்., அனுமதிக்கிறது. ஆனால், அதில் ரகசிய தகவல்களையோ, சர்ச்சையை உருவாக்கும் கருத்துகளையோ பதிவிட கூடாது என, வீரர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதள கணக்குகளில், ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ, புதிய கணக்கு ஒன்றை உருவாக்கினாலோ, அதுபற்றி சி.ஐ.எஸ்.எப்., தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என, புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், புனை பெயர்களில் சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கக் கூடாது; எந்த ஒரு விஷயத்திலும், அரசின் கொள்கைகளை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட கூடாது என, வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Football news:

स्टीमर और सर्बिया के बैक टोपोला यूरोपा लीग में 6:6 खेला । यूरोपीय प्रतियोगिताओं के इतिहास में पहली बार के लिए, दोनों टीमों के रन बनाए 5+
कोवालेवका गांव से बी-36, सेन्डेरसके और कोलोस। ये टीमें, डाइनेमो के विपरीत, यूरोपा लीग के अगले दौर पर पहुंच गया
सब कुछ पागल लगता है, जिसमें एक यूरोपा लीग मैच: स्कोर 6:6 है, पांच के साथ वापसी, नवोदित गोलकीपर से एक जीत पेनल्टी शूटआउट
डे विभाग एक पैकेज डील के हिस्से के रूप में ल्यों से मिलान करने के लिए स्थानांतरित कर सकते हैं
राफेल बेनिटेज़: जोस के साथ प्रतिद्वंद्विता खेल के लिए अच्छा था. लिवरपूल 2000 के दशक में जोस मुरिन्हो के तहत चेल्सी के साथ उसकी प्रतिद्वंद्विता की डालियान प्रो, साझा यादों के आरोप में अब है जो चेल्सी
लिवरपूल आर्सेनल खेल सकते हैं, टोटेनहम लीग कप के 4 दौर में चेल्सी खेल सकते हैं
लोकोमोतिव टैबिलिसि के कोच: डायनमो पर जीत डायनमो मास्को के साथ यूरोपा लीग के 2 क्वालीफाइंग दौर के मैच को अभिव्यक्त किया