India

சுஷாந்த் சிங் மரண வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க பரிந்துரை


பாட்னா :'பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரைத்து உள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், 34, கடந்த ஜூன் மாதம், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



latest tamil news

சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசில் சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பீஹார் தனிப்படை போலீசார், மும்பையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு மும்பை அரசு ஒத்துழைப்பு அளிக்க வில்லை என, பீஹார் போலீசார் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் சுஷாந்த் சிங் தந்தை மனு கொடுத்தார். இதையடுத்து சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பினால், மாநில அரசு, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் என, நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில், அவர் கூறியதாவது:சுஷாந்த் குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்ததன் பேரில், அவரது மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, மாநில அரசு பரிந்துரைக்கிறது. சி.பி.ஐ., விசாரணைக்கான அனைத்து அடிப்படை சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான பரிந்துரையை, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பி விடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார். பீஹார் அரசு பரிந்துரைக்க முடியாதுசுஷாந்த் சிங் மரணம் பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது பற்றி, சுஷாந்தின் காதலி ரியாவின் வழக்கறிஞர் சதிஷ் மனேஸ்ஷிண்டே, மும்பையில் கூறியதாவது:

சுஷாந்த் சிங்கின் மரணம் பற்றி விசாரிக்க, பீஹார் போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படிஇருக்கையில், சுஷாந்த் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க, பீஹார் அரசால் பரிந்துரைக்க முடியாது. இந்த வழக்கை, பீஹார் போலீசார் விசாரிக்க முடியாது என்பதை தெரிந்து தான், சி.பி.ஐ.,விசாரணை என, பீஹார் அரசு கூறி, வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Football news:

मौरिसियो पॉचेटिनो: रियल मैड्रिड का नेतृत्व करने के लिए मेरा सपना है । मैं बेनफिका और मोनाको द्वारा संपर्क किया गया था
स्टीमर और सर्बिया के बैक टोपोला यूरोपा लीग में 6:6 खेला । यूरोपीय प्रतियोगिताओं के इतिहास में पहली बार के लिए, दोनों टीमों के रन बनाए 5+
कोवालेवका गांव से बी-36, सेन्डेरसके और कोलोस। ये टीमें, डाइनेमो के विपरीत, यूरोपा लीग के अगले दौर पर पहुंच गया
सब कुछ पागल लगता है, जिसमें एक यूरोपा लीग मैच: स्कोर 6:6 है, पांच के साथ वापसी, नवोदित गोलकीपर से एक जीत पेनल्टी शूटआउट
डे विभाग एक पैकेज डील के हिस्से के रूप में ल्यों से मिलान करने के लिए स्थानांतरित कर सकते हैं
राफेल बेनिटेज़: जोस के साथ प्रतिद्वंद्विता खेल के लिए अच्छा था. लिवरपूल 2000 के दशक में जोस मुरिन्हो के तहत चेल्सी के साथ उसकी प्रतिद्वंद्विता की डालियान प्रो, साझा यादों के आरोप में अब है जो चेल्सी
लिवरपूल आर्सेनल खेल सकते हैं, टोटेनहम लीग कप के 4 दौर में चेल्सी खेल सकते हैं