India

'பிரதமர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்'

சென்னை : 'சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு நீதி கிடைக்க, பிரதமர் மோடி தலையிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள, 2019ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூக நீதி உரிமை, அநியாயமாக தட்டிப் பறிக்கப்பட்டுஉள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான, 10 சதவீத இடஒதுக்கீடு, சிவில் சர்வீசஸ் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், சமூக நீதிக்கு பெரும் பாதகம் விளைவித்து உள்ளது.

வங்கி தேர்வுகள், மத்திய அரசு துறைகளுக்கான தேர்வுகள் துவங்கி, இப்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுகளிலும், அரசியலமைப்பு சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பான, 10 சதவீத இட ஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, இது குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் விரிவாக ஆலோசனை நடத்தி, ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயங்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டி, நியாயம் வழங்க வேண்டும்.

கடந்த, 2019ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் பற்றி வெளிப்படையான ஆய்வு நடத்தி, நேர்ந்திருக்கும் தவறுகளைக் களைந்து, நீதி வழங்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


'இந்தியன் என்பதற்கு அளவுகோல் ஹிந்தியா?'

டுவிட்டர் பதிவில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஹிந்தி தெரியாது என கூறியதால், 'நீங்கள் இந்தியரா' என, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கனிமொழி எம்.பி.,யிடம் கேட்டுள்ளார். 'ஹிந்தி' தான் இந்தியன் என்பதற்கான அளவு கோலா? இது இந்தியாவா; 'ஹிந்தி'யாவா...? பன்முக தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே, அதில் புதையுண்டு போவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், 'முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து விரைந்து மீண்டு, முழு உடல் நலம் பெற்றிட விழைகிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

Football news:

पाउलो फ़ोनसेका: यह रोमा को वापस छोटा लाने के लिए महत्वपूर्ण है. हम केवल 3 केंद्रीय रक्षकों
आर्टेटा हे 2:1 वेस्ट हैम के साथ: आर्सेनल नुकसान के साथ खुद के लिए जीवन कठिन बना दिया, लेकिन वे लड़े और जीत में विश्वास
पैलेस मिडफील्डर टाउनसेंड: एक बड़ा अंतर के साथ मैनचेस्टर यूनाइटेड पीटा जा सकता था. हम क्षणों था
फिलिप कौटिन्हो: मैं प्रेरित कर रहा हूँ और मैं सब कुछ पिच पर अच्छी तरह से बाहर काम करने के लिए कड़ी मेहनत करना चाहते हैं
चेल्सी पर टोरेस: मुझे लगता है मैं एक शीर्ष खिलाड़ी रह सकता है सोचा, लेकिन मैं अस्थिर था. पर्याप्त सफलताओं थे हालांकि
मैनचेस्टर यूनाइटेड के खिलाफ टूटे हुए दंड पर नेविल: एक निरपेक्ष अपमान
विडाल 1 लाख यूरो के लिए इंटर बार्सिलोना से चलता है