India

ராமர் கோவிலுக்கு அடிக்கல்; முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து

சென்னை: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு, தமிழக மக்கள் சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி: அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, இன்று பூமி பூஜை சிறப்பாக நடப்பதற்கு, என் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், மனமார்ந்த வாழ்த்துக்கள்.கடந்த, 1992 நவம்பர், 23ல் நடந்த, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஜெயலலிதா, அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என, வலியுறுத்தினார். அதே சமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என்றார்.

இதன் வழியாக, தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும், ஹிந்துக்கள், முஸ்லிம் மக்கள் இடையே, அவர் ஒற்றுமையை விரும்பினார். உச்ச நீதிமன்றம் வழங்கிய, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கத்தக்க, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான, சுமூக சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள்.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற, ஹிந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்று, அடிக்கல் நாட்ட உள்ள, பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

Football news:

स्टीमर और सर्बिया के बैक टोपोला यूरोपा लीग में 6:6 खेला । यूरोपीय प्रतियोगिताओं के इतिहास में पहली बार के लिए, दोनों टीमों के रन बनाए 5+
कोवालेवका गांव से बी-36, सेन्डेरसके और कोलोस। ये टीमें, डाइनेमो के विपरीत, यूरोपा लीग के अगले दौर पर पहुंच गया
सब कुछ पागल लगता है, जिसमें एक यूरोपा लीग मैच: स्कोर 6:6 है, पांच के साथ वापसी, नवोदित गोलकीपर से एक जीत पेनल्टी शूटआउट
डे विभाग एक पैकेज डील के हिस्से के रूप में ल्यों से मिलान करने के लिए स्थानांतरित कर सकते हैं
राफेल बेनिटेज़: जोस के साथ प्रतिद्वंद्विता खेल के लिए अच्छा था. लिवरपूल 2000 के दशक में जोस मुरिन्हो के तहत चेल्सी के साथ उसकी प्रतिद्वंद्विता की डालियान प्रो, साझा यादों के आरोप में अब है जो चेल्सी
लिवरपूल आर्सेनल खेल सकते हैं, टोटेनहम लीग कप के 4 दौर में चेल्सी खेल सकते हैं
लोकोमोतिव टैबिलिसि के कोच: डायनमो पर जीत डायनमो मास्को के साथ यूरोपा लीग के 2 क्वालीफाइंग दौर के मैच को अभिव्यक्त किया