Sri Lanka
An article was changed on the original website

அரசை மக்கள் விமர்சிப்பது ஏன்? விளக்குகிறார் அமைச்சர் ஹக்கீம்

அரசின் உள்ளகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதிலேயே ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றன. அதனால் அரசின் அபிவிருத்திப் பணிகளை வெளிக்கொண்டுவருவதில் ஊடகங்களின் ஆர்வம் குறைந்துள்ளது. இதுவே இந்த அரசாங்கத்தை மக்கள் விமர்சிப்பதற்கும், அரசாங்கம் என்ன செய்துள்ளது என்று மக்கள் கேட்பதற்கும் காரணமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டத்தின் ஆரம்பவேலைகள் நேற்று அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை ஆரம்பித்துவைத்ததன் பின்னர் அங்கு உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

இந்த நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக குடிதண்ணீர்ப் பிரச்சினை திகழ்கிறது. சுத்தமான குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. எவ்வாறான சவால்கள் வந்தபோதிலும் அவற்றை தைரியமாக எதிர்கொள்ளும் திராணியும், சக்தியும் எம்மிடம் உள்ளன.

எனவே, நீர்வழங்கல் திட்டங்களில் அவ்வப்போது ஏற்படுகின்ற தொய்வுநிலையைத் துரிதமாக சரிசெய்து அத்திட்டங்களை விரைவில் முடித்து மக்கள் பாவனைக்கு குழாய் வழியாக தூய்மையான குடிதண்ணீரை வழங்கிவைக்கும் தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகிறோம்.

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளையும், பிரச்சினைகளையும் வெளியே கொண்டுவருவதிலேயே இப்போது ஊடகங்கள் அதிகம் ஆர்வம் செலுத்துகின்றன. இதனால் இந்த அரசாங்கம் நேர்மையாக மேற்கொள்கின்ற அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதில் ஊடகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், எமது பணியை நாங்கள் எந்த விளம்பரங்களையும் எதிர்பார்க்காமல் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இதனை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம், முன்னர் பேசிய சங்கைக்குரிய மதகுரு ஒரு கருத்தை முன்வைத்தார்.

அதுதான் இந்த அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் பொது மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

பொதுமக்களின் இந்தக் கருத்திற்கு என்ன காரணம் என என்னை விழித்து அவர் கேள்வியெழுப்பினார். அவரது கேள்விக்கான பதில் இதுதான்.

எனது அமைச்சுக்குக் கீழுள்ள நீர்வழங்கல் திணைக்களத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது. நான் அமைச்சைப் பாரமெடுத்த உடனேயே 30% சம்பள உயர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தற்போது 20% சம்பள உயர்வுக்கான திறைசேரி அனுமதியைப் பெற்றுள்ளோம். அதாவது, இந்த மூன்று வருடத்திற்குள் மொத்தமாக 50% சம்பள உயர்வை நாங்கள் பெற்றுக்கொடுத்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வெறுமனே இன்னும் 3% சம்பள உயர்வை அதிகரிக்கவேண்டும் என்று வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவருகின்றன.

இந்தத் தொழிற்சங்கங்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் வேறு அரசியல் தலையீடுகள் இருக்கின்றனவா என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது.

எது எவ்வாறாயினும் இந்தத் தொழிற்சங்கங்கள் உண்மைநிலையைப் புரிந்து செயலாற்றவேண்டும். இன்னும் நீர்க் கட்டணம் உயர்த்துவது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை. இப்போதும் நீரை சுத்திகரித்து குழாய் வழியாக பொதுமக்களுக்கு வழங்குவதற்குப் பாரிய செலவு ஏற்படுகின்றது.

ஆனால், நாங்கள் மிகக் குறைவான கட்டணத்தையே அறவிடுகிறோம். எனவே, எமது இந்தச் செயற்பாடுகளுக்கு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.எமது திணைக்களத்தில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுபவர்கள் என்பது நான் அறிந்த விடயம். இந்த விடயத்தில் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

ஆனமடுவ ஒருங்கிணைந்த பாரிய நீர்வழங்கல் திட்டமானது புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வசிக்கின்ற ஒரு தொகுதி மக்களின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இத்திட்டத்தை எமது இந்த அரசின் கால எல்லைக்குள் முற்றாகப் பூர்த்திசெய்து மக்கள் பாவனைக்கு கையளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் திட்ட முகாமையாளர் பத்மா குணவர்தன உட்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்திலுள்ள 91 கிராமசேவகர் பிரிவுகளிலும், குருநாகல் மாவட்டத்திலுள்ள 34 கிராமசேவகர்கள் பிரிவுகளிலும் வசிக்கின்ற பொதுமக்கள் இதன்மூலம் தூய குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியும். 36 மாத கால எல்லையில் பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் 81,741 பொதுமக்கள் பயனடையவுள்ளார்கள்.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த ஸ்பெயின் அரசாங்கம் 4,633 மில்லியன் இலங்கை ரூபாவை கடனாக வழங்கியுள்ளது. இது தவிர, ஹற்றன் நேஷனல் வங்கி 2,050 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 1,942 மில்லியன் ரூபாவையும் வழங்குகின்றன, ஒட்டுமொத்தமாக இதற்கான மொத்தச் செலவானது 8,625 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சீரற்ற காலநிலை என்பன சிலநேரங்களில் பாரிய நீர்வழங்கல் திட்டங்களைக் குறித்த நேரத்தில் நிறைவுக்குக் கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. அவற்றையும் தாண்டி இவற்றை நிறைவுசெய்து மக்களின் பாவனைக்கு வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் வேறெந்த நீர் வழங்கல் அமைச்சர்களும் செய்திராத நீர்வழங்கல் திட்டங்கள், செயற்றிட்டங்கள் என்று அதிகமாக நாங்கள் செய்துவருகிறோம். முன்னெப்போதும் இல்லாதவகையில் 300 பில்லியன் ரூபாக்களை இவற்றுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. எமது அரசாங்க காலத்திற்குள் வடமத்திய மாகாணத்தில் 90% நிலப்பகுதிகளுக்கு குழாய் வழியிலான நீரை வழங்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவ்வாறே குருநாகல் மாவட்டத்தில் 50% நிலப்பரப்பானது குழாய் வழியாக தூயநீரைப் பெற்றுக்கொள்ளமுடியும். முழு இலங்கையிலும் அண்ணளவாக 64% நிலப்பரப்பானது 2020இல் குழாய் வழியாக தூய குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல மற்றும் அளவ்வ நீர்வழங்கல் திட்டம், தெதுறு ஓயா நீர்வழங்கல் திட்டம், பானகமுவகலகெதர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம், புத்தளத்தில் ஒருங்கிணைந்த ஆனமடுவ நீர்வழங்கல் திட்டம், கலா ஓயா நீர்வழங்கல் திட்டம் போன்ற பல நீர்வழங்கல் திட்டங்களை நாம் மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த ஆனமடுவ நீர்வழங்கல் திட்டம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பல முயற்சிகளை மேற்கொண்டார். இவற்றைத் துரிதமாக முடிப்பதற்கும், கொண்டு நடத்துவதற்கும் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், அமைச்சின் செயலாளர் ஹப்பு ஆராச்சி, நீர்வழங்கல் வடிகால் திணைக்களத்தின் தலைவர் அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, அமைச்சின் மேலதிக திட்டமிடல் பணிப்பாளர் நபீல், நிக்கவரட்டிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வி மூஸா மற்றும் அரசியல் பிரமுகர்கள், அமைச்சின் அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Football news:

Zinedine Zidane: People always talk about Real Madrid, because This is the most important club in history
Lukas Podolski: Sane hasn't reached the top level yet. He needs to play for the national team, win the Euro or the world Cup
Police arrested a 12-year-old boy in the case of threats against Zaa
These people are sick. They need help. The fear and loathing of the North London Derby
Farfan's goal could not be counted: before that, the referee called from the goal, and CHorluka just took the ball and ran forward with it
Son has scored 10+ goals for Tottenham in the Premier League four seasons in a row
Milan are Interested in the striker of Lille Osimana