Sri Lanka

சமூக விஞ்ஞான போட்டியில் பங்குபற்றுவதற்கு முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை - மூதூர், இராழ்குழி பகுதியில் டிமோபட்டா வாகனமும் முச்சக்கர வண்டியும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் இராழ்குழி கஜமுகா வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி பயிலும் 13 வயதுடைய நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இம்மாணவர்கள் மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியில் பங்குபற்றுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மூதூர் பொலிஸார் டிமோபட்டா வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Football news:

Luis Suarez: We lost the title ourselves. For the sake of prestige, Barca must concentrate on fighting for the Champions League
Real Madrid is ready to sell Ceballos for 25 million euros
Manchester United is ready to pay 120 million euros for Sancho if they get into the Champions League
Saul: if Real Madrid win La Liga, it will only be because they deserve it. VAR puts a penalty in their favor, as they put pressure on the opponent
Tiago put his house in Munich up for sale. Liverpool was Interested in him
Glushakov before the game with Spartak: I have no problems with the fans
Olivier Giroud: I'm Glad that my goal helped Chelsea win