Sri Lanka

இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கையில் மக்கள் சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களிற்கு இந்தியாவின் மொத்த பற்றுறுதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவின் கிழக்கு மாகாண விஜயம் தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு விசேட வைபவத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மட்டக்களப்பில் இந்திய வீட்டு வசதி செயல்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 4000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்தது.

இது வடக்கில் இந்திய அரசாங்கத்தால் நன்கொடை அளிக்கப்பட்ட 42000 வீடுகள் மற்றும் தற்போது மலையகத்தில் நன்கொடைகளின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் 14000 வீடுகள் என்பவற்றுக்கு மேலதிகமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது விஜயத்தில், முன்னதாக திருகோணமலையில் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்து கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் கூட்டத்தில் உரை ஆற்றியிருந்ததுடன் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கும் சென்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்ஸ்தானிகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மட்டக்களப்பில் காந்தி சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். கிழக்கு மாகாணத்திலிருந்தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அவர் சந்தித்ததுடன் பல்வேறு பள்ளிவாசல் சம்மேளனங்களிலிருந்தான பிரதிகளின் ஒரு குழுவுடனும் சுருக்கமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் கல்லடி எனுமிடத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் முதலாவது கூட்டுறவு சமூகத்தினால் நடத்தப்படுகின்ற வர்த்தக வசதியளித்தல் நிலையத்திற்கும் உயர்ஸ்தானிகர் விஜயம் செய்தார்.

இந்தியாவைத் தளமாகக் கொண்ட சமூக அடிப்படை ஸ்தாபனமொன்றான ‘பெண்கள் சுய வேலைவாய்ப்புச் சங்கம்’ (SEWA) இந்திய அரசாங்கத்திட மிருந்து 197 மில்லியன் இலங்கை ரூபாய் நன்கொடையுடன் இந்த செயல்திட்டத்தை மேற்கொண்டது.

இலங்கையில் மக்கள் சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களிற்கு இந்தியாவின் மொத்த பற்றுறுதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்தவையாக உள்ளன என்பதுடன் அவற்றுள் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை தனியே நன்கொடை உதவிகளாகும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Football news:

Antonio Conte: I will not hesitate before leaving if Inter are not happy with what I am doing
Diego Godin: Inter will do everything to keep second place. Now we need to think about how to catch up with Juventus
Harry Maguire: Manchester United want to fight for trophies
Zidane on the victory over Granada: real suffered as a team. Two more games, we haven't won La Liga yet
Real have won 11 games with a minimum score in La Liga for the first time in 11 years
Akinfenwa after Wycombe's exit to the championship: the Only person who can charge me even more is Klopp
Ramos on the title: I hope that Real Madrid will celebrate the championship on Thursday. Everything is in our hands