Sri Lanka

ஜனாதிபதித் தேர்தலில் முடியாது போனால் பொதுத் தேர்தலில் போட்டியிடுங்கள்! மைத்திரிக்கு யோசனை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியை ஏற்படுத்த முடியாது போனால், அந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கி, பொதுத் தேர்தலில் கூட்டணியை அமைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அணி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அரசியல் கூட்டணியை அமைத்து அதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது போனால், இந்த யோசனையை செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவதை பொதுஜன பெரமுனவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியை ஏற்படுத்த வேண்டுமாயின், எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதிக்கு முன்னர் அதனை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு கூட்டணியை ஏற்படுத்த முடியாது போனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலில் ஈடுபடுவது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என கட்சியின் தலைமைக்கு அறிவிக்கவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாம் ஆண்டு மாநாட்டின் போது, அந்த கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ள தயாராகி வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த 8 பேரில் 7 பேருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகளும், ஒருவருக்கு மாவட்ட தலைவர் பதவியையும் வழங்க பொதுஜன பெரமுன இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Football news:

Lazio has lost 3 matches in a row and can concede 2nd place in Serie A if Atalanta wins against Juve
A Parma employee has a coronavirus. The team is isolated on the base, but will continue to play in the championship
Kalidou Coulibaly: Napoli is not going to Barcelona as tourists. We are able to give battle
PSG have extended their contract with Kimpembe until 2024
Suarez is not in the start for the match with Valladolid. He has scored 4 goals in the last 4 games for Barca
Dyche Pro 1:1 with Liverpool: top team Scored. Talking about three points is too much
Klopp on the draw with Burnley: Liverpool should have scored 3-4 goals. We are disappointed