Sri Lanka

மக்களுக்கு வழங்கும் நிதி உதவிகளில் முறைகேடுகள் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

ஜனாதிபதி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் நிதியுதவிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது, எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் முறைகேடுகள் நடந்திருந்தால், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதவாச்சி நகரில் அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பரவிய வைரஸ் காரணமாக சீர்குலைந்து போன மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் நோக்கில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கியது.

எதிர்காலத்திலும் அந்த தொகை வழங்கப்படும். இதற்காக தீர்மானங்களை எடுப்பது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம்.

மக்கள் சிரமமின்றி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை நாங்கள் முடிந்தளவில் பெற்றுக்கொடுத்தோம்.

மக்களுக்காக ஒதுக்கிய பணத்தில் முறைகேடு நடத்திருந்தால், அதற்கு எதிராக சட்டத்தை நாங்கள் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தினோம். அடுத்த சில மாதங்களுக்கும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாங்கள் தயங்க போவதில்லை.

தற்போது பெய்து வரும் கன மழைக்காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அந்த மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Football news:

Ronaldo posted a photo of the celebration after Torino's goal: I love this feeling😉 💪 🏼
Flick about Lewandowski and the Golden ball: Why not? He laid the foundations
Jurgen Klopp: my two main Champions League favourites are Bayern and Manchester City
Cheryshev made an assist in La Liga for the first time since September
Muller of the victory in the German Cup: a Bit of a sad moment. There were no fans in this final
Lampard on 3-0 with Watford: a dry Win at home, three goals scored-Chelsea played very well
Pulisic on 3-0 with Watford: Chelsea needed this win. We are confident that we can get into the top 4