Sri Lanka

நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் அண்மைய காலங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரியவருகிறது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதிக நீரை வெளியேற்றுவதற்காக இன்றைய தினம் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

எனினும் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அவதானத்துடன் செயற்படுமாறு நீர்த்தேக்க பகுதிகளின் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Football news:

Christophe Dugarry: Messi really could have given Griezmann more passes. Antoine lost confidence
Sane passed a medical for Bayern and went to meet with the club's management
Neuer - in goal, Hakimi and Davies burn out the flanks, in front-Sancho, Muller and Lewandowski. Collected Dreamtime Bundesliga-19/20
Casillas is almost not on the video in honor of Spain's victory at Euro 2012. Perhaps this is due to his promotion to the post of President of the FFI
Setien's future in Barca is under threat. The players don't support it
Trent on motivation: Ronaldo and Messi never relax. The more you win, the more you want to continue
Conte on criticism: attack me, Not the club or my players. There are people who want to see the glass half empty